December 6, 2025, 12:01 AM
26 C
Chennai

வளைகுடா நாடுகளில்… உயிர் பயத்தில் தமிழர்கள்: மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு அன்புமணி கடிதம்!

anbumani
anbumani

வளைகுடா நாடுகளில் உயிர் பயத்தில் தமிழர்கள் உள்ளனர் என்றும், சிறப்பு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்க வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாமக., இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை இழந்து வாடும் தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்; அந்த நாடுகளில் கொரோனா நோய் வேகமாக பரவி வருவதாலும், கொரோனா பாதித்த வெளிநாட்டவருக்கு அந்த நாடுகளில் சிகிச்சை மறுக்கப்படுவதாலும் தாங்கள் கொரோனா நோய்க்கு ஆளானால் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை அனுப்பி அங்கு வாடும் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு, தாயகத்துக்கு அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதற்காக தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றுவதற்காக சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்போது பல்வேறு காரணங்களால் அங்கு மிக மோசமான சூழலில் இருப்பது குறித்தும், அவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான அவசரத்தேவை குறித்தும் தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

வளைகுடா நாடுகளில் மிகப்பெரியதான சவுதி அரேபியாவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் தவிர சிறிய அளவிலான பராமரிப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளைச் செய்வதற்காக 3 மாத வணிக விசாவில் சென்றவர்களும் அவர்களின் பணியை முடித்து விட்டனர். ஆனால், ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதால், அவர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கு கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் தங்களிடமிருந்த பணத்தை செலவழித்து விட்டனர். அதனால் அடுத்த வேலை உணவுக்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. மற்றொருபுறம் சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள இந்தியர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சவுதி அரேபிய அரசு தயாராக இல்லை. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நாட்டினருக்கும் மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மாறாக, இந்தியர்கள் எவருக்கேனும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே மருந்து சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் உயிரிழக்க நேரிடுமோ என இந்தியர்கள் அஞ்சுகின்றனர்.

தாயகம் திரும்புவற்காக அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ள போதிலும், இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்திலுள்ள அவர்கள் குடும்பத்தினரும் கவலையில் வாடுகின்றனர்.

கத்தார் நாட்டிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்திய தொழிலாளர்களுக்கு கொரோனா உள்ளிட்ட எந்த நோய்க்கும் சிகிச்சை மறுக்கப்படுகிறது. கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்க்கு அதிகம் பாதிக்கப் படுவோர் இந்தியர்களாகவே உள்ளனர். அதே நேரத்தில் எந்த வளைகுடா நாட்டிலும் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லை என்பதால், அங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கொரோனா தாக்கினால் மருத்துவம் பெறுவதற்கு வழியில்லை. அதனால், கத்தாரில் வேலையிழந்து வாடும் இந்தியர்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விரைந்து தாயகம் திரும்ப விரும்புகின்றனர்.

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு கத்தார் நாட்டிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்த பகுதிக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்ப இயலாமல், தங்களை கொரோனா தாக்குமோ என்ற அச்சத்தில் கத்தாரில் தவித்து வருகின்றனர்.

குவைத் நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் போதிய ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வந்த இந்தியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் 7340 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றுள்ளது.

வளைகுடா நாடுகளில் மிக மோசமான கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடு குவைத் ஆகும். அங்கு நேற்று வரை மொத்தம் 11,975 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர். குவைத்திலும் இந்தியர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5&க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்து விட்டனர். ஆனால், அவர்கள் மாரடைப்பால் இறந்து விட்டனர் என்று கூறி அது குறித்த தகவல்களை மறைத்து விடுகிறது. அதுமட்டுமின்றி இந்தியா திரும்புவதற்காக குவைத்தில் வாழும் இந்தியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் முகாம்களில் காத்திருக்கும் நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இந்தியர்களின் மன உளைச்சல் அதிகரித்துள்ளது.

குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மே 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மொத்தம் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் இரு விமானங்கள் கேரளத்திற்கும், ஒரு விமானம் ஆந்திரத்துக்கும் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்பட வில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவது தமிழர்கள் தான். அவர்களை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுய்க்கு உண்டு. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தேவையான சிறப்பு விமானங்களை இயக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories