ஜூன் 7 முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு

Published:

சென்னை: ஜூன் முதல் வாரத்தில் இருந்து தமிழகத்தில் ஆம்னி தனியார் பேருந்துகள் இயங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் இருந்து தமிழகத்தின் இதர மாவட்டப் பகுதிகளுக்கு ஜூன் 7-ம் தேதி முதல் ஆம்னி சொகுசுப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு செயலிகளில் (ஆப்கள்) இருந்து இத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஜூன் முதல் வாரத்தில் பொதுப்பேருந்துகளை இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி தந்துவிடும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு நடவடிக்கை தொடங்கியிருப்பதாக கோயம்பேடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியே பேருந்துகள் இயக்கப்பட்டாலும், சமூகவிலகல் காரணமாக அதிக அளவு பயணகளை ஏற்றி செல்ல வாய்ப்பு இல்லாததால், பயணிகள் கட்டணம் மூன்று மடங்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு விரைவு பேருந்துகளைப் பொறுத்தவரை முன்பதிவு ஏதும் தொடங்கப்படவில்லை.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img