
அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய அமைப்பாளர் முருகேசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேம்பங்குடி பன்னீர்செல்வம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோரின் முன்னிலையில் மாவட்ட மகளிர் அணிதலைவர் கவிதா அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், மற்றும் முககவசங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் : அறந்தாங்கி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பாண்டியன், விஜிவீரப்பன், மாரியப்பன், கொடிவயல்,ஆறுமுகம், ராமநாதன், குகன், ராமச்சந்திரன் மாத்தூர்மணி,கண்ணன், சுப்பையா, நாட்டுமங்களம் ஆதிமூலம், வீரையா,சுகுமாரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



