
தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளனர்; இதுவரை 7,491 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இன்றைய அறிக்கை..

