
பாரதமாதா சிலை தேச பக்தர்களின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா காட்டுவிளை பாரதமாதா சிலை திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக, கன்னியாகுமரி தென்தாமரைகுளம் புவியூரில் காவல்துறையால் மூடபட்ட பாரதமாதா சிலையை திறக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை ஒட்டி இன்று காலை 10 மணிக்கு பாரதமாதா சிலை திறக்கப்பட்டது.