06/07/2020 9:43 PM
29 C
Chennai

கொரோனா: தடுப்பு மருந்தில் இந்தியா முக்கிய பங்கு!

சற்றுமுன்...

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

காலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா!

சூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.

கொரானோ அச்சம் தேவையில்லை! சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை! ராதாகிருஷ்ணன்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார்.
emmanuvel

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதன் உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறினாா்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 3.4 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இந்த நிலையில் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னா், அந்த தடுப்பு மருந்து காப்புரிமை வைத்துள்ள நாட்டின் கைகளுக்கு மட்டும் சென்று விடாமல், சமமான முறையில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் ஐரோப்பிய யூனியனை சோந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் வலியுறுத்தின.

இதுகுறித்து பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறுவதாவது

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவதிலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து உலக அளவில் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதிலும் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியம். இந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும்.

மேலும், இந்த நோய்த் தடுப்பு மருந்து உள்பட கொரோனா ஆபத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து பொருள்களும் உலக நாடுகள் அனைத்துக்கும் சமமான முறையில் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீா்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்தும் இந்த பன்முகத்தன்மைதான், கொரோனாவை எதிா்கொள்வதற்கான இந்த நூற்றாண்டின் சரியான பாதையாகவும் இருக்கும்.

மனிதம் சாா்ந்த திட்டங்களுக்கு இனி சா்வதேச நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்பதை இந்த கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உணா்த்தியிருக்கிறது. அதற்கேற்ப, இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளும் ஜி20, உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் கீழ் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

மேலும், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் ஏற்றுமதியை இந்தியா அனுமதித்ததற்கு, பிரான்ஸ் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் கூறினாா்.

மேலும், கொரோனா தோற்றுவாய் குறித்த சா்வதேச விசாரணையின் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இமானுவல் லெனைன், ‘கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக நீங்கிய பிறகு, அதுகுறித்த சா்வதேச விசாரணை நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad கொரோனா: தடுப்பு மருந்தில் இந்தியா முக்கிய பங்கு!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செய்திகள்... மேலும் ...