
இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் தமது 96ஆவது வயதில் காலமானார். 1923 டிசம்பர் 31 ஆம் தேதி பஞ்சாப்பில் உள்ள ஹரிபூர் கல்சாவில் பிறந்தவர் பல்பீர் சிங்.

ஒலிம்பிக் தொடரில் ஹாக்கி போட்டிகள் மூன்று முறை தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தவர் பல்பீர் சிங். மொகாலி நகரில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.