
பல்வேறு வேடங்களைப் போட்டுக் கொண்டு வந்து, நாட்டுப் புறக் கலைஞர்கள் நிவாரணம் கேட்டனர்.
கொரோனா தாக்கத்தால் கடந்த 65 நாட்களாக தங்கள் வாழ்வாதாரம் சீரழிந்து விட்டதாகவும், பிழைப்பின்றி வறுமையில் வாடுவதாகவும் கூறி ஆட்சியரை சந்திக்க வந்தனர் மதுரை வாழ் நாட்டுப்புறக் கலைஞர்கள்.
அரசு தங்களுக்கும் வாழ நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அவர்கள் தங்களது தொழிலை நினைவூட்டும் வகையில், மதுரையில் வியாழக்கிழமை இன்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு வேடங்களைப் புனைந்தவாறு வந்தனர்.
தாங்கள் பிழைக்கின்ற தொழிலை மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மதுரை மாவட்ட ஆட்சியரை மனுவுடன் சந்திக்க வந்தனர் மதுரை மாவட்ட நாட்டுபுற கலைஞர்கள்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை,