
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்வு - சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,243 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 24, 545 ஆக அதிகரிப்பு
- தமிழகத்தில் மேலும் 21 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 307 ஆக உயர்வு.
- தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 18, 325 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழக அரசின் சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி…
கொரோனா பாதிப்புக்கு 44 அரசு சோதனை மையங்களிலும் 33 தனியார் நிலங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 34 ஆயிரத்து 914 பேர் பாசிட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளன.
இன்று தமிழகத்தைச் சேர்ந்த 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகத்தில், 1,685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 34 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. இன்று மட்டும் 13 ஆயிரத்து 219 சாம்பிள்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. 12,421 பேருக்கு பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 1091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள்.
இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகபட்ச அளவாக 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்! இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது! சென்னையில் அதிகபட்சமாக இதுவரை 244 பேர் உயிரிழந்துள்ளனர்!
சென்னையில் அதிகபட்ச அளவாக, இன்று 1243 பேர் கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
