
- தமிழகத்தில் 46,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,843
பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.. - மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது!
- கொரோனா உயிரிழப்பில் இன்று புதிய உச்சம்!
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்தது!
கொரோனா தொற்று தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 1789 பேருக்கும் வெளி மாவட்டம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 54 பேருக்கும் சேர்த்து 1843 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுவரை 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று 797 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதையடுத்து இன்று வரை கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர் 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 32 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னையில் அதிகபட்சமாக 1257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 120 பேருக்கும் திருவள்ளூரில் 50 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 34 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது
மதுரை மாவட்டத்தில் 33 பேருக்கும் திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களில் தலா 9 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தவை…
- மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை அரசு கட்டுப்படுத்தி வருகிறது
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு.
- தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46,504 ஆக உயர்வு
- ஒரே நாளில் 797 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
- இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 44 பேர் உயிரிழப்பு.
- தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 29 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- சென்னையில் மட்டும் 1257 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு.
- சென்னையில் இதுவரை 33,244 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு.