
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாமை, செயல் அலுவலர் ஜீலான்பானு தொடங்கி வைத்தார்.
மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிஷா மகேஸ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை பரிசோதித்தனர்.
இளநிலை உதவியாளர் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், குரு சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ரவிச்சந்திரன், மதுரை