
பங்குனி உத்திரத்தன்று கோவிலைத் திறந்ததற்காக பூசாரியை அழ அழ வைத்து, போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டிய வீர தீர மிக்க காவல்துறை, இன்று சுத்தமல்லி காவல் நிலையம் தென்பத்து கிராமம் சர்ச் சை திறந்து திருவிழா போல் பல நூறு பேரை திரட்டி நடத்தும் திருமணத்தை நடத்திய பாதிரியாரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பல மணி நேரமாக!
கோவில் பூசாரி மட்டும் இளிச்சவாயனா ?காவல்துறையின் இந்து விரோத போக்கை இந்துவே பார் ! தற்போது நெல்லை டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள தென்பத்து கிராமம் சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிறிஸ்துவ சர்ச்சில் திருமண விழா

பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு இருக்க பிரியாணி விருந்து முகக் கவசம் இல்லை சமூக இடைவெளி இல்லை… கோவிலை பூட்டி வைத்திருக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ சர்ச்சை மட்டும் திறந்து வைத்திருக்கிறது!

இப்படி குற்றம் சாட்டுகிறார் நெல்லையைச் சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்.
பொதுவாகவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல் துறையினர் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதற்கு ஏற்ப, இந்துக்களின் மீதும் கோயில் பூசாரிகள் மீதும் வழக்கு போட்டு பயமுறுத்தி தங்கள் வீரத்தைக் காட்டுவதும், இஸ்லாமியர்கள் பத்து பேர் திரண்டு வந்து புகார் கொடுப்பதற்குள் மேலிட பிரஷர் என்று அவர்களாகவே காரணம் கூறியோ வேறு எதற்கோ அடிபணிந்து பயத்தின் உச்சிக்கே செல்வதும், அவர்கள் கைகாட்டும் நபர் மீது வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினரின் செய்கைகளால், அப்பாவி இந்துக்கள் தங்களைக் காப்பாற்றுவதற்கு காவல் துறை லாயக்கற்ற துறை என்று இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.