
கீழாநெல்லி தயிர் பச்சடி
தேவையானவை: கீழாநெல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தயிர் – 100 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீழாநெல்லி இலையை ஆய்ந்து, அலசவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கீழாநெல்லி இலையை வதக்கி… தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை தயிருடன் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: வயிற்றுவலி, குடல் புண், மஞ்சள்காமாலை போன்றவற்றுக்கு கீழாநெல்லி மருந்தாக பயன்படுகிறது.