
அங்காயப் பொடி
தேவையானவை:
கடுகு, மிளகு – தலா 2 டீஸ்பூன்,
சுக்கு – ஒரு துண்டு,
வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு,
சீரகம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
சுண்டைக்காய் வற்றல் – 15,
தனியா – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உப்பு நீங்கலாக மற்றப் பொருட்கள் ஒவ்வொன்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: சாதத்துடன் அங்காயப் பொடியை சேர்த்து, நெய் அல்லது நல்லெண்னெய் விட்டுக் கலந்து சாப்பிடலாம். இது… வயிற்றுவலி, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கும்.