
ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்! காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே!
செங்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய சீன அரசை கண்டித்து சீனக் கொடியை எரித்தும் சீனப் பொருள்கள் வாங்க கூடாது என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ் பொதுச்செயலாளர் மணிகண்டன், சமூக ஊடக பேரணி மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் அமைப்பாளர் முத்துமாரியப்பன், நகர செயலாளர் சுப்பிரமணி, இளங்கோ, இந்துமுன்னனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் இந்துமுன்னனி நகர தலைவர் மூர்த்தி, இசக்கிமுத்து, VHP நகர தலைவர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டித்தும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சீன பொருட்களுக்கு தடை விதிக்க கோரி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வினர் சீன கொடியை எரிக்க முயன்ற போது அதை போலீசார் தடுத்தனர். மேலும் இது தொடர்பாக 11 பேரை கைது செய்தனர்.