December 6, 2025, 3:32 PM
29.4 C
Chennai

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!வரம்பு மீறிய மதுரை மக்கள்! கடுப்பான அமைச்சர் உதயகுமார்!

madurai minister udayakumar function
madurai minister udayakumar function( file picture)

மதுரை: ஊரடங்கு உத்தரவை மீறி மதுரை நகரில் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுகிறார்கள். ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என மக்கள் அலை மோதி வருகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

இப்படி இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரானா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மதுரைமாவட்ட செய்தியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மாத்திரைகளை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆர்.பி உதயகுமார், கொரானா வைரஸை தடுப்பதற்காக தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் 7 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள். நோய் தொற்று ஏற்படக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு மருத்துவ பரிசோதனை செய்து,நோய் தொற்று உள்ளவர்கள் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சிங்க் விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணங்கள் பொதுமக்களுக்கு,வயதான முதியவர்கள் குடிசைமாற்று பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் அதிகமான கூட்டம் கூடுகிறார்கள். மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூடிய கடைகள் காய்கறி மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் இயங்கும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என அலை மோதி வருகின்றனர்.

மதுரையில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.மதுரை மக்கள் கொரானா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்த்து அச்சப்படத் தேவையில்லை. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரை நாம் காப்பாற்றி இருக்கிறோம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பலவிதமான நோய்கள் இருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரையில் 600க்கும் மேற்பட்டவர்கள் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்புவது தான் நமக்கு நம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது. தற்போது பொது சுகாதார அவசர பிரகடனம் நடைமுறையில் இருந்து வருகிறது இதை நாம் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், பெரியபுலான், நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories