
தமிழகத்தில் காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் முழு முகக்கவசம் அணிவதை அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலீசார், கொரோனாவினால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அவர்களுக்கு முழு முகத்தை மறைக்கும் மாஸ்க்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்ப்புப் பணியில் களப் பணியாற்றுபவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 54.434 போலீசாருக்கு 54434 பேருக்கு முகத்தை மறைக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி பிறப்பித்த உத்தரவில்….
தமிழகத்தில் அனைத்து போலீசாருக்கும் முகத்தை முழுமையாக மறைக்கும் முழுமாஸ்க் (ஃபேஸ் ஷீல்ட்) மற்றும் கையுறைகளை வழங்க வேண்டும். போலீசார் முழு முகக்கவசம் அணிவதை மாவட்ட எஸ்.பி.,க்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
போலீசாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து நகராட்சி பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியாளர்கள் மாஸ்க், கையுறை அணிந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறினர்.