கர்நாடகாவிலிருந்து இ-பாஸ் இல்லாமல் நடந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை! பீலா ராஜேஷ்!

Published:

beela rajesh

இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்காணிக்கப்படுவதாக சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து 32 பேர் வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 86,235 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1133 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img