தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று உறுதி!

Published:

corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்… 
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,713 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 68,254 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 60 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 62,778 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது.இதை அடுத்து,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,11,151ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,254ஆக உயர்வு கண்டுள்ளது. 

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய உயிரிழப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,510ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் 34,831 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருவது அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் கவலையை அளித்துள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்து மதுரையில் இன்று ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது..

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில்  274 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது; திருவள்ளூர் மாவட்டத்தில் 209 பேருக்கும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 152 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

வேலூர் மாவட்டத்தில் 179 பேருக்கும், திருவண்ணாமலை மாவடத்தில் 141 பேருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 109 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 83 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது. 

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

விருதுநகர் மாவட்டத்தில் 113 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 88 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. 

district wise details july
district wise details july

Related articles

Recent articles

spot_img