மீண்டும்… நாளை முதல் தளர்வுகள்! கொரோனாவை வெல்ல… கோயம்பேடு மந்திரம்!

Published:

koyambedu traders1
koyambedu traders1

பொது நன்மைக்காக –
KFM – KOYAMBEDU FRUIT MARKET வெளியீடு!

நாளை முதல் சென்னையில் தளர்வுகள். ஆனால் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!

1. முக கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.

2. முக கவசம் மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி அணியவும்.

3. நீங்கள் நுழையும் கடைகளில் முக கவசம் இல்லாமல் யாரேனும் இருந்தால் அவர்களை அணிய சொல்லுங்கள். மறுத்தால் அந்த கடையிலிருந்து உடனே சென்று விடுங்கள். கடைக்காரர்கள் முக கவசம் அணியவில்லை என்றல் அங்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.

4.பில்லிங் இடத்தில கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் சமூக இடைவெளி விட்டு நில்லுங்கள். 

5. எவருடனும் கை குலுக்குவதை தவிருங்கள். 

6. முக கவசம் அணிய சொல்வதற்கோ , சமூக இடைவெளி பின்பற்ற சொல்வதற்கோ கூச்சப்படாதீர்கள். உங்கள் நண்பனாக இருந்தாலும், உறவினரும் ஆக இருந்தாலும் சரி, தயங்க வேண்டாம்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

7.கைப்பையிலோ , வண்டியிலோ sanitizer பாட்டில் வைத்து அடிக்கடி கைகளை சுத்தபடித்திக் கொள்ளுங்கள்.

8.தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள் 

9. வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் துணிகளை அகற்றி தலை உட்பட முழுமையாக குளியுங்கள்.

10. கழற்றிய துணிகளை மறுநாள் காலை வரை தொடாதீர்கள். 

11. முதியோர்கள் வீட்டில் இருந்தால், வெளியே செல்பவர்கள் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதை சில வாரங்களுக்கு தவிர்த்துவிடுங்கள்.

12. எவரேனும் இதை எல்லாம் நீங்கள் செய்வதற்கு உங்களை கிண்டல் செய்தால் அதை பொருட்படுத்தாதீர்கள். 

நம் சென்னையை கொரோனா நோய் தாக்கத்திலிருந்து காப்பது நம் கடமை. 
ஒத்துழைப்போம் அரசுடன்.
முறியடிப்போம் கொரோனவை.

Related articles

Recent articles

spot_img