விநாயகர் சதுர்த்திக்கு… தயாராகும் சிலைகள்!

Published:

vinayaka chaturti1 - 2026
  • விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாராகும் சிலைகள்
  • போக்குவரத்து வசதிகள் செய்து தர கோரிக்கை

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள். முதற் கடவுளான விநாயகர் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வழி விடுவாரா என ஏக்கத்தில் விளாச்சேரி பொம்மை தயாரிப்பளார்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கிராமம் உள்ளது இங்குள்ள கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொலு பொம்மைகள், சாமி சிலைகள் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறிய அளவில் இருந்து இரண்டு அடி அளவிலான விநாயகர் பொம்மைகள் தயாரித்து வருகின்றனர்.

vinayaka chaturti2 - 2026

தற்பொழுது கொரானா ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுமா என்ற அச்சத்திலும் இவர்கள் உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகம் ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு இங்கு தயாராகும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப் படுகின்றன.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

சிறிய விநாயகர் சிலை 25 ரூபாய் முதல் இரண்டு அடி விநாயகர் சிலை 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 3 அடி ,5 அடி, 8 அடி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.

vinayaka chaturti3 - 2026

தற்போது கொரான ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஊர்வலம் செல்லும் பெரிய விநாயாகர் சிலை
சமூக இடைவெளியை வேண்டி பெரிய சிலைகள் தயாரிக்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சிலைகள் விற்பனை செய்தால்தான் தங்களுக்கு பொருளாதார நிலை உயரும் என்ற நிலையில் உள்ளனர். தற்போது தயாரான விநாயகர் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே வைத்துள்ளனர்.

பொது போக்குவரத்து. பார்சல் வசதி செய்ய முடியவில்லை.
இதனால் இவர்களுக்கு பணம் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விநாயகர் சிலை நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து போக்குவரத்து வசதி செய்து தந்தால் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படும் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img