பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குர்மீத்துக்கு தண்டனை
வழங்கப்படும் இன்று, அரியானாவில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பு
இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீதிபதி ஜெகதீப் சிங்கை போலீசார் ஹெலிகாப்டரில்
அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவரது ஹெலிகாப்டர் சிறை அருகே தரை இறங்க
வசதி செய்யப்பட்டுள்ளது. சிறைக்குள் சி.பி.ஐ. கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பை நீதிபதி ஜெகதீப்சிங்
வெளியிடுவார். அவரது தீர்ப்பு வெளியிடப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்கு
வன்முறையாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளனர்
அரியானா உச்சகட்ட பாதுகாப்பு
Popular Categories




