narasimmar kpr DHAINASARI - 2026

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100
ஆண்டுகள் பழமைவாய்ந்தது . இத்தலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த
சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது
இந்த மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 16 வகையான மூலிகைகளால்
மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான
பொருட்களால் அபிசேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில்
தீர்த்தவலம், தீபாராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய
சபையினரும் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending