குமரி – குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில்
இருந்து பாதுகாப்பான குழந்தை பருவம் பாதுகாப்பான இந்தியா என்ற முழக்கத்தை
முன்வைத்து குழந்தைகள் கலந்து கொண்ட பேரணியை நோபல் பரிசு பெற்ற கைலாஷ்
சத்யார்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
22 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பேரணி அக்டோபர் 16 ம் தேதி டெல்லியில்
நிறைவடைகிறது.
இந்த நிகழ்சியில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்
சஜ்ஜன் சிங் சவான், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா உட்பட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




