சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும் போராட்டத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
3 மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறியதால் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் இதுவரை அவர்கள் வைத்த கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காலவரையற்றப் போராட்டம் நடத்தப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.



