
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் கடந்த ஜூன் மாதம் இறந்தார். இதுபற்றி சிபிஐ விசாரணை நடக்கிறது. சுஷாந்த் வங்கி கணக்கிலிருந்து காணாமல்போன ரூ .15 கோடி மோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.
மும்பை மலாட் நகரில் சுஷாந்துக்கு சொந்தமான ரூ 4.5 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டில் சுஷாந்த்தின் மாஜி காதலி, நடிகை அங்கிதா லோகண்டே வசிக்கிறார். அந்த வீட்டுக்கு சுஷாந்த் வங்கி கடன் தவணை கட்டி வருகிறார். 6 ஆண்டுக்கு முன் சுஷாந்த் அங்கிதா காதலித்தனர் பின்னர் பிரேக் அப் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.
அங்கிதா சுஷாந்த்திடம் பிரேக் அப் செய்து கொண்டபோதும் அவர் இறந்ததி லிருந்து அவரது மரணம் குறித்து சி பி ஐ விசாரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.
சுஷாந்த தந்தை கேகே சிங், சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது புகார் 12 கோடி மோசடி குறித்து புகார் கொடுத்திருப்பதையடுத்து அவரிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில்தான் சுஷாந்த்தின் மலாட் குடியிருப்பு பற்றி தெரிய வந்திருக்கிறது. ரியா குடும்பத்தார் மற்றும் அவரது வீட்டு வேலையாட்களிடமும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை செய்து வருகின்றனர்ர்்்