கேரளத்து வரவான கீர்த்தி சுரேஷ் குறைந்த நாட்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்று சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நடிக்க அவர் தன் உடல் எடையை குறைத்தார். அதனால் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.
இந்நிலையில் குட்லக் சகி என்ற படத்தில் கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர் கதையின் நாயகியாக நடிக்க ஆர்வம் உடையவர். குட்லக் சகி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக ஆதி நடித்துள்ளார்.
வட மாநிலத்தின் பின் தங்கிய கிராமத்தில் இருந்து தேசிய அளவில் சுப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணின் கதையே குட்லக் சகி. இதில் கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக அப்படியே வட இந்திய பெண்ணாக மாறியுள்ளார்.