சோனு சூட்டை கிண்டல் செய்த பெண்! பதிலடி கொடுத்த சோனு சூட்!

Published:

Screenshot_2020_0816_122533

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு தொடக்கத்தில் வேலைக்காக வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தவர்களும் தென்னிந்தியாவில் இருந்து வடஇந்தியாவுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் ரயில், பஸ் போன்ற பொது சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் ஆயிரம் கீலோமீட்டர் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

Screenshot_2020_0816_122457

அந்த சமயத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல சிரமப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தி நடிகர் சோனு சூட் உதவி கரம் நீட்டினார்.

கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்து, ரயில், விமானம் மூலமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் சோனு சூட்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் இந்திய அரசின் சார்பில் மாஸ்கோவுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள், தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக சோனு சூட்க்கு தெரிய வர தனி விமானத்தை மாஸ்கோவிற்கு அனுப்பி தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதையடுத்து தமிழக மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். மேலும் விவாசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்து உதவினார், தற்பொழுது குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கும் உதவியுள்ளார்

இந்த நிலையில், மஞ்சு ஷர்மா என்ற பெண் ‘எனது போனில் இண்டர் நெட் வேகத்தை அதிகரிக்க முடியுமா?’ என சோனு சூட்டை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்திருந்தார்.

அதற்கு கலகலப்பான பதிலை அளித்த சோனு. தனது பதிலில் ‘இப்போது நான் ஒரு பெண்ணின் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்வது, ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது மற்றும் ஒரு வீட்டு குழாயில் நீர் வரவைப்பது போன்ற பிரச்சனைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் நாளை காலை வரை பொறுக்க முடியுமா?’ எனக் கூறியுள்ளார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

உதவும் மனப்பான்மை கொண்டு செயல்பட்டு வரும் ஒருவரிடம் கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் இவ்வாறு ஒருவர் கேட்டுள்ளது வருத்தத்தை அளிப்பதாக இருந்தாலும்,அதனை சோனு சூட் அணுகிய விதம் பாராட்டுக்குரியது. சில நாட்களுக்கு முன் விளையாட பிலேஸ்டேஷன் கேட்ட பையனுக்கு புத்தகங்களை சோனு சூட் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img