
தமிழகத்தில் இன்று மேலும் 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்தனர்.அதே நேரம் 6019 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,650 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று 6,019 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,78,270 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அடுத்து, கோயம்புத்தூரில் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 488 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் :
