இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு! போலிஸ் குவிப்பு

சற்றுமுன்
IMG 20170920 WA0012 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை அருகே உள்ள வாவாநகரம் கிராமத்தை
சார்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச்செயலாளர் முகம்மது
உசேனின் மனைவி சேகம்மாள் (48) 17/ 9/17 அன்று காலை 8 மணிக்கு இறந்து விட்டார்

அவரின் பிரேதத்தை (ஜனாசாவை) நேற்று காலையில் வாவாநகரம் சுன்னத் ஜமாஅத்
பள்ளிவாசல் பொது மய்யவாடியில் அடக்கம் செய்ய. அனுமதி கேட்டபோது அவர்கள்
சுன்னத் ஜமாஅதினர் மறுத்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் நேற்று
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அச்சசன்புதூர் காவல்நிலையத்தை
முற்றுகையிட்டு, இறந்து விட்டவரின் உலை எங்கள் நபிவழிப்படி அடக்கம் செய்ய
வேண்டும் என்று போராடி வந்தனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார்
மற்றும் செங்கோட்டை தாசில்தார் ஆகியோர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை
நடத்தியும் தீர்வு இல்லாததால் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் அமைப்பினர்கள் பல்வேறு ஊர்களிலிந்து வாவாநகரம் நோக்கி வரத்தொடங்கினர்

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

அதன் பின்னனர் அவர்கள் சேகம்மாளின் உடலை நபிவழிப்படி இறந்தவரின் மகன் தொழுகை
வைத்து வாவாநகரம் பள்ளிவாசல் பொது மைய்யவாடியில் அடக்கம் செய்ய சென்றபோது
சட்டம் ஒழுக்கு பிரச்சனை வரும் என்பதற்காக 50 மீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில்
காவல் துணை கண்கானிப்பாளர் ராஜேந்திரன் , புளியங்குடி காவல் துணை
கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் செங்கோட்டை
சுரேஷ்குமார், கடையநல்லூர் கோவிந்தன், புளியங்குடி ஆடிவேல்,ஆலங்குளம்
ஐய்யப்பன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலிசாரால் தடுத்து
நிறுத்தப்பட்டது

அதன் பின்னர் தென்காசி சப் கலெக்டர் ராஜேந்திரன் செங்கோட்டை தாசில்தார்
ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தினர்

இறந்து விட்ட உடல் அரசுக்கு சொந்தமானது அதனை அடக்கம் செய்யும் இடமும் வக்பு
மையவாடியும் அரசுக்கு சொந்தமானது… எனவே அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
என்பதை எடுத்துக்கூறி இறந்தவரின் உறவினர்கள் ஐந்து நபர்கள் மட்டுமே அடக்கம்
செய்ய அனுமதிப்பது என்ற முடிவின் படி அமைதியான முறையில் அடக்கம்
செய்யப்பட்டது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.