மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் புனித நீராடினார் முதலமைச்சர் பழனிசாமி.
மயிலாடுதுறை மகாபுஷ்கரத்தை ஒட்டி காவிரி ஆற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
புனித நீராடினார்.
அமைச்சர் எம்.சி.சம்பத் முதல்வருடன் புனித நீராடினர்.
இதனிடையே திருச்சி விமான நிலையத்தில் டி.டி.வி தினகரன் பேட்டி யளித்தபோது
பழனிச்சாமி உள்ளிட்ட துரோகக்காரர்கள் இன்று புனித நீராடுவதால், ஆற்றின்
புனிதம் கெடுமே தவிர இவர்கள் எத்தனை முறை மூழ்கினாலும் தூய்மையாக மாட்டார்கள்.
தமிழ்நாட்டில், மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் இந்தியா முழுவதும்
அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது என்றார்.




