குமரி:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது. கமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 10 கணினிகளும் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ரூ.1.28 லட்சம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வல்லங்குமாரன் விளை பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கையக்கப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஷண்முக சுந்தரம் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நாகர்கோவில் 1 ஆவது கூடுதல் சார்பு நீதிமன்றம் உத்தரவின்படி இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மாவட்ட ஆட்சியரின் நான்கு சக்கர வாகனம் மாற்றும் 10 கணினிகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.



