
தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 98 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,39,959ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,732ஆக உயர்ந்துள்ளது!
தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர் இஅதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3,80,063 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,516ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 75,829 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 47,99,905 ஆக அதிகரித்துள்ளது.