ஏப்ரல் 19, 2021, 3:01 காலை திங்கட்கிழமை
More

  கொரோனா: பொதுமக்கள் பயன்படுத்த தடுப்பூசி வெளியீடு: ரஷ்யா!

  covishild

  உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

  கொரோனா பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டை நெருங்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் போராடி வருகிறது.

  இந்நிலையில் பல நாடுகள் மனிதனுக்கு செலுத்தி சோதனை செய்துவரும் நிலையில், நாங்கள் தடுப்பு மருந்தை உருவாக்கிவிட்டோம் என அறிவித்தது ரஷ்யா.

  ரஷ்யா உருவாக்கியுள்ள கொரோனாவுக்கு எதிரான ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

  கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கான காம்-கோவிட்-வெக் எனப்படும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கான சோதனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனையடுத்து கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்டமாக பொது மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என ரஷ்யா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. எனினும் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுமா?, மற்ற நாடுகளுக்கு எப்போது புழக்கத்தில் வரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »