
தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட சிவகளை அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஏரல் தாலுகா சிவகளை பரம்பில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணி நடந்தது.
அகழாய்வு பணியில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழிகளை கடந்த 17 ந் தேதி திறக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் எடுக்கப்பட்டன. நெல் கதிர்மணிகள், மணித தாடையுடன் பற்கள், கிண்ணம், பிராமி தமிழ் எழுத்துக்கள் கொண்ட மண்பாண்ட ஓடுகள் கிடைக்கப்பெற்றன.
மனித தாடையுடன் பற்கள் காமராஜ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு எந்தாண்டு ஆண்டில் வாழ்ந்த மனிதன் என்பது பரிசோதனை செய்யப்படுகிறது.
தொல்லியல்துறை முதன்மை செயலர் உதயசந்திரன் ஏரல் தாலுகா சிவகளையில் நடந்துவரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகளையில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனையும் பார்வையிட்டார்.
முதன்மை செயலருடன் தொல்லியல்துறை இணை இயக்குநர், பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் பாஸ்கரன், தங்கத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகளையில் அகழாய்வு பணியில் கிடைத்த அரிய பொருட்களை சுற்றுவட்டார பொதுமக்கள் பார்வையிட்டனர்.