நடராஜன் உடல்நிலை மோசம்: பரோலுக்கு விண்ணப்பிக்கிறார் சசிகலா

சற்றுமுன் சென்னை

பெங்களூர்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரது கணவர் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்துவிட்டது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உறுப்பு தான மையத்தில் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டயாலிசிஸ் சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி கூறியபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வரும் 3-ம் தேதி பரோல் கோரி விண்ணப்பிக்க உள்ளார். என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 26ம் தேதி இதே போன்ற செய்தி வெளியானபோது, அதை மறுத்தார் புகழேந்தி. அதன் பின்னணியில் கர்நாடக சிறைத்துறை இருந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை மருத்துவமனையில் இருந்து நடராஜன் உடல் நிலை குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பே பரோல் விண்ணப்பம் மீது பரிசீலனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால், சற்றே பின்வாங்கியதாகக் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.