சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவ படை என்ற இயக்கத்தின் நிறுவுனருமான பி.சிவகாமியின் மகன் சுனந்த் ஆனந்த் (வயது 24) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனந்த் வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் படித்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கே சவுத் கரோலினா மாகாணத்தில் உள்ள ‘கிளெம்சன்’ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பை முடித்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சுனந்த் ஆனந்த், தனது காரில் ஹைவேயில் சென்று கொண்டிருந்த போது, கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், சுனந்த் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சுனந்த் ஆனந்தின் உடல் இந்தியா கொண்டு வரப் படுகிறது. அதற்கு 2 நாட்கள் ஆகும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சுனந்த் ஆனந்த், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் 2-வது மகன். இவரின் அண்ணன் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் மகன் விபத்தில் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week