நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டி பகுதியில் உள்ள காளி
மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று காலை
திருவிழாவில் சப்பர வீதியுலா நடைபெற்றுள்ளது. அப்போது பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது மேலே சென்று வெடிக்கும் பட்டாசு போடும் போது அதில் இருந்து வந்த
தீப்பொறி அங்கு குவித்து வைக்கப்பட்ட பட்டாசுகள் மீது விழுந்து விபத்து
ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் அங்கு நின்றிருந்தவர்கள் 7 மீது தீக்காயம் ஏற்பட்டு பலத்த
தீக்காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்
கணபதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த
காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருவிழாவில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர்பலி, 6 பேர் காயம்
Popular Categories



