காங்கிரஸில் இருந்து குஷ்பு விலக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘‘எவ்வித ஆதாரமும்
இன்றி காங்கிரஸில் இருந்து நான் விலகப் போவதாக வதந்திகளை சிலர் பரப்பி வருவதாக
குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களின் பொய்
பிரச்சாரம் இது என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன். வேறு
கட்சிக்கும் செல்ல மாட்டேன்’’ என்றும் கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் வதந்தி: நடிகை குஷ்பு
Popular Categories




