தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்டு இருப்பதால், நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது
குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 10 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் 23 பேர் உயிர்
இழந்து உள்ளனர் என்பதை ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் கூறி இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார். மேலும் சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுக்காமல் போகும்போது
அல்லது உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வராதது போன்றவற்றால்தான் ‘டெங்கு’
நோய் தாக்குதல் முற்றுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே காய்ச்சல்
பாதிப்பு இருந்தாலே அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என்றும் தொடர்ந்து 5
நாட்கள் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். சரியான நடவடிக்கை
மூலம் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்என்றும் அவர் கூறியுள்ளார்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது: அமைச்சர்
Popular Categories




