தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டும்
என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியவர் மத்திய
அரசோ, மாநில அரசோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான முடிவைக் கொண்டு
வரக்கூடத் தயாராக இல்லை. இது மிகவும் வேதனை பட வேண்டிய ஒன்றாக இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, குதிரை பேர
அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர்
பன்னீர்செல்வம் ஆகியோர் 110 விதியினைப் பயன்படுத்தி வெளியிட்ட திட்டங்கள் எந்த
நிலையில் இருக்கின்றன, அதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும்
கோரிக்கை வைத்திருப்பதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கடன்களை திருப்பி செலுத்த வற்புறுத்த கூடாது: மு.க.ஸ்டாலின்
Popular Categories




