விஜயவாடா போகும் வழியில் விவசாயிகளோடு சாலை அருகில் நின்று உரையாடிய நிர்மலா சீதாராமன்.
விஜயவாடா சுற்றுப் பயணத்திற்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராம விவசாயிகளோடு உரையாடினார்.
வேளாண் மசோதாவை விவசாயிகள் வரவேற்றார்கள் என்று ட்விட் செய்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விஜயவாடா வந்தடைந்தார். விஜயவாடா வரும் வழியில் அவர் கன்னவரம் மண்டலம் ஜக்குல நெக்கலம் கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த விவசாயிகளோடு உரையாடினார்.
உள்ளூர் விவசாயிகளிடம் வேளாண் சூழ்நிலைகளை கேட்டறிந்து கொண்டார். பயிர்கள், அவைகளுக்குக் கிடைக்கும் போதுமான விலைகள் போன்றவை குறித்து அவர்களோடு பேசினார்.
அப்போது தானியங்கள், கரும்பு பயிர்களுக்கு கிடைக்கவேண்டிய தொகை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள். நெற்பயிருக்கு ஒரு குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். கருவேப்பிலையை எங்கு வேண்டுமானாலும் விற்கும்படி எங்களுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரினார்கள். மத்திய அரசு அதற்கான சட்டம் விரைவில் எடுத்து வரும் என்று நிர்மலா அவர்களுக்கு விவரித்தார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மத்திய அரசு அண்மையில் எடுத்து வந்த 3 வேளாண் மசோதாக்களை வரவேற்பதாக அங்கிருந்த விவசாயிகள் அமைச்சரிடம் தெரிவித்தார்கள் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்கள். தம்முடைய பயிர்களை இனி எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்ற விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள்.




