சோனு சூட் குறித்து ஸ்கூல் ப்ராஜெக்ட்… வீடியோ பகிர்ந்த ஷில்பா செட்டி.
லாக்டௌன் நேரத்தில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தம் சொந்த ஊரை சென்றடைவதற்கு உதவி புரிந்த நடிகர் சோனூசூட் சேவைகளை பிரமுகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் பாராட்டியுள்ளார்கள்.
அண்மையில் நடிகை ஷில்பா செட்டியின் எட்டு வயது மகன் வியான் சோனூசூட்டின் ரசிகராக மாறியுள்ளார். சோனூவின் சேவைகளைப் பாராட்டி தன் ஸ்கூல் ப்ராஜெக்ட்டுக்காக ஒரு அனிமேட்டட் வீடியோவை வியான் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த சில்பா செட்டி உணர்ச்சிவசப்பட்டார். தன் மகன் வடிவமைத்த வீடியோவை நெட்டிசன்களோடு பகிர்ந்துள்ளார்.
நம்மைச் சுற்றிலும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் சிறு குழந்தைகள் கூட கவனிக்கிறார்கள். ஸ்கூல் பிராஜக்ட்டுக்காக என் மகன் செய்த அனிமேட்டட் வீடியோவை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் விஷயங்களை வியான் புரிந்து கொண்டிருக்கிறான். அதில் ஒரு பகுதியாக என் நண்பர் சோனு சூட் செய்த சேவைச் செயல்களுக்கு ரசிகன் ஆகிவிட்டான். கொரோனா அச்சத்தால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நேரத்தில் அடுத்தவர்களின் கஷ்டங்களை துடைப்பதற்காக தைரியமாக முன் நோக்கி செல்கிறார் சோனூசூட். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த சேவைகள் மூலம் என் மகனின் இதயத்தை தொட்டுள்ளனர். இதன் காரணமாகவே சோனூசூட் குறித்து ஸ்கூல் ப்ராஜெக்ட் காக ஒரு வீடியோவை தயார் செய்துள்ளான் வியான். இந்த வீடியோவுக்காக அவனே கதை எழுதி டப்பிங் செய்து எடிட்டிங் கூட செய்துள்ளான். வியான் ஒர்க் பார்த்து கர்வத்தோடு வியந்து உள்ளேன் என்று ஷில்பா ஷெட்டி கூறினார்.




