
ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை விவகாரம்! ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கிய கிராமத்தினர்!
மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக இன்று இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் உடல்களை எடுத்துச் சென்றனர்!அப்போது, குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரணன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
இதை அடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவருடைய வீட்டை ஊர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை