பிப்ரவரி 24, 2021, 10:55 மணி புதன்கிழமை
More

  பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

  Home சற்றுமுன் பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

  பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

  இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  kanyakumari-bagavathi-amman-ula
  kanyakumari-bagavathi-amman-ula

  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் ஐந்தாவது நாளான இன்று அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது.

  அன்றிலிருந்து நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு துறை சார்பில் பகவதி அம்மன் கோவிலில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் 5ம் நாளான இன்று பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  பக்தர்கள் சங்க கோரிக்கையாக 300 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழாவான பரிவேட்டை நிகழ்ச்சி தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் சமூக இடைவெளிவிட்டு பரிவேட்டை விழா நடத்த அரசு அனுமதி தர வேண்டும் இல்லை எனில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பாக பலகட்ட போராட்டங்கள் நடைபெறும் என்பதை கோரிக்கை வைத்தனர்

  Support Us