லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

Published:

inspector-anitha
inspector-anitha

மதுரை: மதுரை அருகே லஞ்சம் வாங்கி கைதான பெண் இன்ஸ்பெக்டர் அனிதாவை தென்மண்டல ஐஜி முருகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி இன்ஸ்பெக்டராக இருந்தவர் அனிதா . இவர் பழைய வழக்கொன்றில் குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் லஞ்சமாக கேட்டார். அதில் 30 ஆயிரத்தை முதல் தவணையாக வழங்குமாறு கூறினார்.

இதனை அடுத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது இவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அனிதாவை தென்மண்டல ஐஜி முருகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img