
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது. இதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன.
- புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது
- இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது
- புரெவி புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு
- குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் – வானிலை மையம்
- தூத்துக்குடி துறைமுகத்தில் 6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 7 ஏற்றப் பட்டுள்ளது.
- புரெவி புயல், இலங்கையின் திருகோணமலையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு
- வரும் 4ஆம் தேதி அதிகாலையில் குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
- புரெவி புயல், பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது
- இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது
- கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது

வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை திரிகோணமலையிலிருந்து 300 கி.மீ., தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 700 கி.மீ., தொலைவிலும், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவிலும் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 கி.மீ., வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது; புயல் கரையை கடக்கும் போது 95 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கரையை கடந்த பின், மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வரும் புயல் டிச.04 ஆம் தேதி, நாளை மறுநாள் குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்!