
விக்கிரமசிங்கபுரம் அருகே மின்வேலியில் சிக்கி யானை மரணம் அடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரம் ஊரை சேர்ந்த விவசாயி செல்லக்குட்டி என்பவர் அருணாசலபுரம் அருகே உள்ள மலையடி கிராமத்தில் வயல் வைத்துள்ளார், இந்த வயலைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளார், மின்வேலியில் பெண் யானை ஒன்று சிக்கி இறந்துவிட்டது.
வனச்சரகர் பாரத் இறந்த யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.