
தென்காசியில் 119 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவலகத்துக்கு, காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் ரூ 119 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

அருகில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.