ஜன.1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருள்கள் உண்டு

சற்றுமுன் தமிழகம்

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்க அளித்துள்ளது.  முன்னதாக, சமூகத் தளங்களில் 2018 ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என செய்திகள் பரவின.

இவ்வாறு வரும் தகவல்களுக்கு  மறுப்பு தெரிவித்துள்ள உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை,  ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது எனக் கூறியுள்ளது.

மேலும், இந்த வருட டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் கொடுத்து முடிக்கப்படும் எனவும் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.